கௌரவ ஆளுநர் கலந்து கொண்ட சபையின் நிகழ்ச்சிகள்

சபையின் வருமானத்திலிருந்து புதுக்குடியிருப்பு பொது சந்தையினுள் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு தொகுதி வர்த்தகர்களின் வணிக நடவடிக்கைக்கான சிறந்த உட்கட்டுமான வசதியை வழங்குவதனூடாக வாழ்வாதரத்தினை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட கடைத்தொகுதி மற்றும் உலக வங்கியின் நிதியில் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கடைத்தொகுதி என்பனவற்றை கௌரவ ஆளுநர் அவர்கள் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வூட்டும் அங்குரார்ப்பண நிகழ்வுடன் சபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட திண்மக் கழிவகற்றலுக்காக அட்டை மற்றும் துண்டுபிரசுரம் என்பன சபை மண்டபத்தில் ஆளுநரால் அவர்களினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

 

Clean Srilanka

தூய்மையான இலங்கை (Clean Srilanka) வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுமார் 20 கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தில் எமது சபையினரும் இணைந்திருக்கையில்
 
 
 
 
 
 
 
 

 

 

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கல்

ஒட்டுசுட்டான் உப அலுவலகத்தில் கட்டண அடிப்படையில் (01 லீற்றர் 03/-) சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநி
யோகிக்கும் செயற்பாடு 15.01.2025 அன்று வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
 

உளநலன் மேம்பாட்டு நிகழ்ச்சி

முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் பணியாளர்களின் உளநலனை மேம்படுத்தும் நோக்கில் முல்லைத்தீவு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரின் எண்ணத்தில் புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று, துணுக்காய், மாந்தை கிழக்கு பிரதேச சபைகளினையும் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக பணியாளர்களையும் ஒன்றிணைத்து 04.04.2024 அன்று மல்லாவி மத்திய கல்லூரி மைதானத்தில் துடுப்பாட்டம், வலைப்பந்து, தேசிக்காய் கரண்டி, நீர் நிரப்புதல், கயிறு இழுத்தல், மா ஊதி காசு எடுத்தல் போன்ற விளையாட்டு நிகழ்வுகள் மகிழ்வூட்டும் வகையில் இடம்பெற்றன. இடைவேளை நிகழ்வாக எமது சபை பணியாளர்களினால் உடற்பயிற்சி நிகழ்வும் வழங்கப்பட்டது.

கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தல்

பொது போக்குவரத்திற்கு பொது மக்களிற்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் வீதிகளில் கட்டாக்காலிகளாக நடமாடும் கால்நடைகளை கட்டுப்படுத்தல் நடவடிக்கை ஒட்டுசுட்டான் நகரை அண்டிய பகுதிகளிலும் புதுக்குடியிருப்பின் திப்பிலி சந்தி தொடக்கம் மந்துவில் சந்தி வரை மேற்கொள்ளப்பட்டு சபைக்கு கொண்டுவரப்பட்ட கால்நடைகள் ஒட்டுசுட்டான் உப அலுவலகத்திலும் புதுக்குடியிருப்பு உப அலுவலகத்திலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. உரிமையாளர்கள் உரிய நடைமுறைகளை பின்பற்றி தண்டப்பணத்தினை சபைக்கு செலுத்தி தங்கள் கால்நடைகளை பெற்றுக்கொள்ளலாம் என்பதுடன் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் குறித்த விடயத்தில் கவனம் செலுத்தி எமது மக்களின் நலனிற்கு பங்களிப்பு நல்குவோம்.  

வீதி நிர்மாணம்

சபை நிதியிலிருந்து ஒட்டுசுட்டான் சிவநகர் 1/2 ஏக்கர் வீதி தாரிட்டு புனரமைப்பு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி  நிதியிலிருந்து திருமுறுகண்டி இந்துபுரம் வீதி புனரமைப்பு

   

கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தல்

கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தல் நடவடிக்கை புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கடந்த மார்கழி மற்றும் தை மாதங்களில் மேற்கொள்ளப்பட்டும் மீளவும் சமூக அக்கறை இன்றி புதுக்குடியிருப்பு நகர் பகுதி மற்றும் கோம்பாவில் பகுதிகளில் உரிமையாளர்களினால் பராமரிக்கப்படாது கட்டாக்காலிகளாக வீதிகளில் பிறருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் காணப்பட்ட கால்நடைகள் இன்று (20.02.2024) சபைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

வீதிகளுக்கு ஒளியூட்டுதல்

சபைக்குட்பட்ட பகுதிகளின் வீதிகளுக்கு மின்விளக்கு பொருத்துதல் மற்றும் திருத்த வேலைகள் என்பன சபையினால் முன்னெடுக்கப்படுகின்றது

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு

புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் முன்னைநாள் தவிசாளர் அ.தவக்குமாரன் அவர்களின் 2023 ஆண்டு பாதீட்டு ஒதுக்கத்தில் கோம்பாவில் கிராமசேவகர் பிரிவில் வதியும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கடந்த 10.01.2024 அன்று செயலாளர் தலைமையில் சபையின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் நாற்பது மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 5000/- பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது