வாசிப்பு மாதத்தையொட்டி பாடசாலைகளில் நடாத்தப்பெற்ற போட்டிகளிலும் பொதுமக்களிடையே நடாத்தப்பெற்ற வீட்டு நூலக போட்டிகளிலும் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்விலிருந்து சில பதிவுகள். குறித்த நாளில் புதுக்குடியிருப்பு அறிவொளி புத்தகசாலை உரிமையாளரால் பிரதேசசபையின் நூலகங்களுக்கென ஒரு தொகுதி நூல்களும் கையளிக்கப்பட்டது. அவருக்கு பிரதேசசபை சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Author: webadmin
2024 ஆம் ஆண்டு கடமை செயற்பாடுகளை ஆரம்பித்தல்
உலக மண் தினம் 2023
அபிவிருத்தி கலந்துரையாடல்
எமது சபைக்குட்பட்ட திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்தின் சூழலை அழகுபடுத்தலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இன்றைய தினம் (28.07.2023) மு.ப 11.00 மணிக்கு திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தினர் கள விஜயத்தினை மேற்கொண்டார்.
இதன் போது ஆலய நிர்வாகத்தினர் , வர்த்தக சங்கத்தினர் , கலாசார உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முதலானோருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு நிறைவடையாத சூழ்நிலையில் வழக்கினை எந்தவகையிலும் மீறாத வகையிலும் பாதிக்காத வகையிலும் ஆலய சூழலை அழகுபடுத்தலும் மேம்படுத்தலும் என்ற நோக்கிலே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
பொதுமக்களினால் ஆதனவரி கொடுப்பனவு மேற்கொள்ளல்
புதுக்குடியிருப்பு பிரதேசசபையினால் அறவிடப்பட மேற்கொள்ளப்பட்ட பல வருடகால முயற்சியின் பயனாக ஆனி மாதம் ஒன்பதாம் திகதி சபை வரலாற்றில் முதன்முறையாக பிரதேசவாசி ஒருவரினால் ஆதனவரி சபைக்கு இன்று செலுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் எமது பிரதேச சபையினாலேயே முதன்முதலாக குறித்த வரி அறவீடு மேற்கொள்ளப்பட்ள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சபைக்குட்பட்ட பகுதிகளின் சுத்தம்
இன்று எமது சபைக்குட்பட்ட திருமுறிகண்டி பிள்ளையார் ஆலய வளாகம் மற்றும் பொதுமலசல கூடம் என்பவை ஆனி மாதம் பதின்ரெண்டாம் திகதி அதனை பயன்படுத்தும் பொதுமக்கள் அதனை அண்டியுள்ள வியாபாரிகள் நன்மை கருதி சபையின் வேலைத்தொழிலாளர்கள் மற்றும் சுகாதார தொழிலாளர்களினால் சுத்தப்படுத்தல் மேற்கொள்ளப்படும்
வீதி அபிவிருத்தி
மக்களின் கோரிக்கைக்கமைவாக திருமுகபுரம் 2ஆம் வீதி தற்காலிகமாக போக்குவரத்திற்கு ஏற்றவகையில் சீரமைத்து வழங்கப்பட்டது…