வாசிப்பு மாதத்தையொட்டி பாடசாலைகளில் நடாத்தப்பெற்ற போட்டிகளிலும் பொதுமக்களிடையே நடாத்தப்பெற்ற வீட்டு நூலக போட்டிகளிலும் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்விலிருந்து சில பதிவுகள். குறித்த நாளில் புதுக்குடியிருப்பு அறிவொளி புத்தகசாலை உரிமையாளரால் பிரதேசசபையின் நூலகங்களுக்கென ஒரு தொகுதி நூல்களும் கையளிக்கப்பட்டது. அவருக்கு பிரதேசசபை சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.