எமது சபைக்குட்பட்ட திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்தின் சூழலை அழகுபடுத்தலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இன்றைய தினம் (28.07.2023) மு.ப 11.00 மணிக்கு திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தினர் கள விஜயத்தினை மேற்கொண்டார்.
இதன் போது ஆலய நிர்வாகத்தினர் , வர்த்தக சங்கத்தினர் , கலாசார உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முதலானோருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு நிறைவடையாத சூழ்நிலையில் வழக்கினை எந்தவகையிலும் மீறாத வகையிலும் பாதிக்காத வகையிலும் ஆலய சூழலை அழகுபடுத்தலும் மேம்படுத்தலும் என்ற நோக்கிலே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.