எமது புதுக்குடியிருப்பு பிரதேச சபையானது 968 கிலோ மீட்டர் பரப்பளவையும்  புதுக்குடியிருப்பு மற்றும் ஒட்டுசுட்டான் ஆகிய இரு பிரதேச செயலக பிரிவுகளையும் கொண்ட பகுதியாகும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இச்சபைக்கான தேர்தல்கள் இடம் பெறாத நிலையில் வரலாற்றில் முதல்முறையாக 2018. 03. 28 தொடக்கம் இச்சபை மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கீழான நிர்வாகத்தில் 2023.03.19 வரை இயங்கி தற்போது எமது சபையானது மீண்டும் செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு இயங்கிவருகின்றது. ஏறத்தாள 61,837 தனிநபர்களையும் 20,802 குடும்பங்களையும் கொண்டமைந்த பிரதேசமாக காணப்படுகின்றது.